ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீவிபத்து
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.
தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை
வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கோக்ஸ் பசார் பகுதியில் உள்ள முகாமில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர். அங்கு குடிசை வீடுகள் அதிகம் உள்ள நிலையில் திடீரென ஒரு வீட்டில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ மள மளவென மற்ற வீடுகளுக்கு பரவியது.
50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
தீ அணைக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தகவல் வௌியாகி உள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்ததால் பொருட்சேதம் அதிகம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.