அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். ஜூன் 14 ஆம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறால் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் – முதலமைச்சர் அறிவிப்பு

பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அந்தவகையில் இந்திய வம்சாவழி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புச் வில்வோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
🚀 NASA astronauts Butch Wilmore and Sunita Williams, delayed by Boeing Starliner issues, called the wait "testing times." Williams, who loves space, said they are grateful for more ISS time and eager to vote from space in the US Elections. #SunitaWilliams pic.twitter.com/J72zyNQx2U
— Beats in Brief (@beatsinbrief) September 14, 2024
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அங்கிருந்தவாரே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.