உலகின் மிக குட்டையான திருமண ஜோடி என்ற கின்னஸ் உலக சாதனையை பிரேசிலிய ஜோடி வென்றுள்ளனர்.
கின்னஸ் வென்ற உலகின் மிக குட்டியான திருமணம் ஜோடி பிரேசில் நாட்டை சேர்ந்த 31 வயதான பாலோவும் ,28 வயதான கட்யூசியாவும் 2006 ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் மூலம் நண்பர்கள் ஆகி உள்ளனர். பிறகு இவர்கள் காதல் ஜோடியாக மாறியுள்ளனர்.
காதல் ஜோடிகள் இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின் தற்போது ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ஏழு ஆண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஜோடி தற்போது கின்னஸ் விருது பெற்றுள்ளனர்.
இதில் பாலோவின் உயரம் 90.28 செ.மீ மற்றும் கட்யூசியாவின் உயரம் 91.13 செ.மீ என்பது குறிப்பிடத்தக்கது.