Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்த 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

இந்த 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 19.07.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது.

மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ