spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள்  வருவதற்கு அதிக வாய்ப்பு - பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள்  வருவதற்கு அதிக வாய்ப்பு – பழனிவேல் தியாகராஜன்

-

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் ஐடியில் மண்ணின் மைந்தர்களுக்கே நிர்வாகம் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியில் நியமனம் என்கிற அறிவிப்பால் ஏற்பட்டுற்ளள நிலையற்ற தன்மையால் தமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அதிககோவில் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள்  வருவதற்கு அதிக வாய்ப்பு - பழனிவேல் தியாகராஜன்பேராசிரியர்கள், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் உள்பட17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில்கையெழுத்தானது.

we-r-hiring

 

தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஐடிசி அகாதமி மூலமாக  72 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தபடவுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அமைச்சர் பழனிவேல் தியாகரஜன் மாற்றிக்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஐசிடி நிறுவனம் 2008ல் கலைஞர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் வளர்ச்சி அடைந்த பத்து மாநிலங்களில் மாணவர்களுக்கு பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக சிறந்த செயல்பாடுகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இன்றைய ஒப்பந்தம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து அவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனம் அதன் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஐசிடி அகாடமி பயிற்சி திட்டம் ஐடிஐ-களுக்கும் பயிற்சி விரிவாக்கம் செய்ய தொழிலாளர் நலத்துறையுடன் ஒப்பந்தம் போடபட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் ஐடி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் என்னை (பிடிஆர்) ஐடி துறைக்கு முதல்வர் மாற்றினார்.

பின்தங்கிய பகுதிகளில் இருப்பவர்கள் குறிப்பாக பெண்களை மையப்படுத்தி இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடுவோருக்கான பயிற்சிகள்  வழங்கப்படுகின்றன. இளைஞர்களுக்காக பல திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார் தமிழக முதல்வர்.

பள்ளி மாணவர்களுக்கான திட்டமாக நான் முதல்வன் திட்டம் உள்ளது. அந்த வகையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசாங்கத்தின் துறைகளான NSDC, ESSC ஆகிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெரும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. 102 ஐடிஐ -களுடன் தனித்தனி ஒப்பந்தம் போட்டு வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கப்படுகிறது.

ஏற்கனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 1500 கல்லூரிகள் ஐசிடியுடன் ஒப்பந்தம் போட்டு செயல்பட்டு வருகின்றன. ஐசிடியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பயிற்சி மூலம் பயிற்சி பெற்ற 60-70 சதவிகிதம் பேருக்கு வேலை கிடைக்கவேண்டும் என்பது இலக்கு என்றார்.

முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தின் போது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான பரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் ஐடியில் மண்ணின் மைந்தர்களுக்கே நிர்வாகம் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியில் நியமனம் வேண்டும் என்கிற அறிவிப்பு வெளியாகியது. இதனால் அங்கு நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் புதிய ஐடி நிறுவனங்கள்  வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

MUST READ