spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது விவகாரம் - தமிழக அரசு விளக்கம்!

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது விவகாரம் – தமிழக அரசு விளக்கம்!

-

- Advertisement -

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு ஊழியர் ஓய்வு வயதை 60-லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் பரப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

we-r-hiring

tamilnadu assembly

இது முற்றிலும் வதந்தியே என விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ