Homeசெய்திகள்தமிழ்நாடுவரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

-

- Advertisement -

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக உயர்ந்துள்ளது.வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி 30 முதல் 40 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அவரைக்காய் 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், பூண்டு 160 ரூபாய்க்கும், இஞ்சி 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ‘’இனிவரும் நாட்களில் காய்கறிகள் வரத்து குறைந்து மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்று வியாபாரிகள் கூறியுள்ளனா்.

பண்டிகையை முன்னிட்டு வாழைப்பழங்கள் விலை உயர்வு!!

we-r-hiring

 

 

MUST READ