- Advertisement -
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மயிலை அதிகாரிகள் காப்பாற்றினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர்.
மயிலாடுதுறை மாவட்டம் செட்டித் தெரு அருகே மயில் ஒன்று மின் கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. இந்நிலையில், இது குறித்து அப்பகுதிகள் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மின் கம்பியில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அந்த மயிலை தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


