- Advertisement -
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் ஜூலை 16 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொன்னை பாலு, அருள், திருமலை உள்ளிட்ட 10 பேர் போலீஸ் காவல் முடிந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் 10 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
28 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவது அநீதி- டாக்டர் ராமதாஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருமலைக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் கூட்டாளியான இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புகழும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை அடுத்து போலீசார் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.