- Advertisement -
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ஆம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த 2 பேர் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர் அதில் பெரம்பலுார் தாலுகா, அரும்பாவூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமார், 37 என தெரிந்தது.

இதன் அடிப்படையில் நேற்று அந்த நபரை கைது செய்து 65 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.