spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிகால்நடை விழிப்புணர்வு, தடுப்பூசி முகாம்

கால்நடை விழிப்புணர்வு, தடுப்பூசி முகாம்

-

- Advertisement -

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் கோட்டத்தின் சார்பில் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் அதற்கான விழிப்புணர்வு முகாம் பாடிக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது.

இதில் நாய்களுக்கு ஏற்படும் வெறி நோய்க்கான அறிகுறிகளும், தடுப்பூசி குறித்தும், பிராணிகள் வதை தடுப்பு சட்டம் 1960 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்த தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாமில் பாடிக்குப்பம், அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களை தடுப்பூசி செலுத்துவதற்காக அழைத்து வந்தனர்.

we-r-hiring

பின்னர் அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் அப்பகுதியில் செல்லப் பிராணிகளை வளர்க்கக்கூடிய பொது மக்களுக்கு வெறி நாய் கடித்தால் வரக்கூடிய நோய் குறித்தும், நாய் கடித்தால் எவ்வாறு முதல் உதவி அளிக்க வேண்டும் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தெளிவாக விளக்கினர்.

அதனையடுத்து அங்கு வந்திருந்த நாய்களுக்கு அம்பத்தூர் கோட்ட உதவி இயக்குனர் கோபு, தடுப்பூசி செலுத்தி தொடங்கி வைத்தார்.

மேலும் உதவி கால்நடை மருத்துவர்கள் ரங்கநாதன், பரிமள லீலா, சிவப்பிரியா, வினோதினி, கார்த்தியாயினி ஆகியோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர் இதில் கால்நடை ஆய்வாளர்கள் ரஜினி பிரியா, ஆசின் பானு, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு வளர்ப்பு நாய்களை பரிசோதித்தனர்.

MUST READ