spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 10 பேரை மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி மர்மந பர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார்.

we-r-hiring

arun cop

இந்த நிலையில்ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக வழக்கறிஞர் அருள், பொன்னை பாலு உள்ளிட்ட 8 நபர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அதன் பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவரை எனகவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், கொலை குற்றத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் அருள், பொண்ணை பாலு, ராமு, திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், செல்வராஜ் ஆகிய 10 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒரு வருட காலத்திற்கு பிணையில் வெளிய வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

MUST READ