Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்...

நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

-

- Advertisement -

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜபதி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர், தனது மகள்கள் மாரீஸ்வரி, சமீரா, மாமியார் ஆண்டாள் ஆகியோருடன் வண்ணாரப்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது கண்ணனின் இருசக்கர வாகனத்தின் மீது சேரன்மகாதேவியில் இருந்து தச்சநல்லூர் நோக்கி சென்ற டேங்கர் லாரி மோதியது.

we-r-hiring

இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன், அவரது 2 மகள்கள் மற்றும் மாமியார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேரின் உடல்களையும் தச்சநல்லூர் காவல்துறையினர் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ