Homeசெய்திகள்சென்னைநாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம்!

நாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம்!

-

- Advertisement -

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறக்குமதி குறைவு! நாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களின் சரக்ககங்களில், கடந்த ஆண்டு ஜனவரியில் கையாளப்பட்ட சரக்குகளை விட, இந்த ஆண்டு ஜனவரியில் கையாளப்பட்ட சரக்குகள் அளவு குறைந்துள்ளது.

இறக்குமதி சரக்குகள் மட்டுமே குறைந்துள்ளன. ஏற்றுமதி குறையவில்லை. இதனால் நாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்துவிட்டதால், மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் இறக்குமதி பெருமளவு குறைந்ததும், ஒரு காரணம் என்று சென்னை விமான நிலைய சரக்கக அதிகாரிகள் தகவல்.

we-r-hiring

சென்னை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சர்வதேச சரக்கக முனையம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சரக்கக முனையம், தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி, மாநிலங்களின் சரக்குகளையும் கையாண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை விமான நிலைய சரக்ககம், இந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் 2 கோடி, 35 லட்சம், 93 ஆயிரம் கிலோ சரக்குகளை கையாளப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடி 57 லட்சம் 78 ஆயிரம் கிலோவாக இருந்துள்ளது. எனவே கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஜனவரியில், சென்னை விமான நிலைய சரக்கரகத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 21 லட்சம் 85 ஆயிரம் கிலோ குறைந்துள்ளது.

அதைப்போல் தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் உள்ள சர்வதேச சரக்கங்களிலும், கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில், சரக்குகள் கையாளப்பட்ட அளவு குறைந்துள்ளது.

குறிப்பாக கோவை விமான நிலைய சர்வதேச சரக்கரகத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில், 6.22 லட்சம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன.

இதைப்போல் மதுரை, திருச்சியிலும் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது. இது பற்றி சென்னை விமான நிலைய சர்வதேச சரக்கக அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது அவர்கள் கூறியதாவது,

சென்னை விமான நிலையத்தில் சரக்கத்தில் ஒவ்வொரு மாதமும், ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சகஜம் தான். அதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் எதுவும் இல்லை. மேலும் இந்த கையாளப்பட்ட சரக்குகளில், இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு தான் குறைந்துள்ளது.

ஏற்றுமதி சரக்குகள் அதே நிலையில் தான் இருக்கிறது, குறையவில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், தற்போது நாம் சொந்தமாக பொருட்களை பெருமளவு உற்பத்தி செய்கிறோம். வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதிக்காக காத்திருக்கவில்லை. நமது நாடு சுயமாக சொந்த காலில் நிற்க தொடங்குகிறது, என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அதுமட்டுமின்றி மிக முக்கியமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு, நம் நாட்டில் கொரோனா வைரஸ், மூன்றாம் அலை பெருமளவு தாக்கம் இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு இருந்தன.

அதில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து விட்டதால், வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகப் பெரும் அளவு குறைந்துவிட்டது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரியில், சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலைய சரக்ககங்களில், இறக்குமதி சரக்குகள் கையாளப்பட்டது குறைவுக்கு, இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர்.

MUST READ