spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்9-ம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

9-ம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

-

- Advertisement -

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு 9ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் தேர்வுத்துறையின் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு நவம்பர் 12 முதல் 20ம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்கப்படாது என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

MUST READ