spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘திருமாவளவன் அதிமுகவுடன் இருக்கிறார்’: கொளுத்திப் போட்ட முக்கியப் புள்ளி

‘திருமாவளவன் அதிமுகவுடன் இருக்கிறார்’: கொளுத்திப் போட்ட முக்கியப் புள்ளி

-

- Advertisement -

‘‘திருமாவளவன் எங்களுடன்தான் இருக்கிறார்’’ என அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை கொளுத்திப்போட்டதுதான் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரியார் மீது அவதூறு பரப்புவது தமிழ் இனத்திற்கும் செய்யும் துரோகம் - தொல். திருமாவளவன் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்கிற ரீதியில் விசிகவில் கருத்துகள் எழுந்த நிலையில், அது விவாதமாக மாறியது. அண்மையில், தவெக தலைவர் விஜய்யும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் எனப் பேசி இருந்தார். அதை தொடர்ந்து சில கட்சிகள், கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு என்னும் கருத்தை வைத்து விசிகவுக்கு தொடர்ந்து மறைமுகமாக வலை வீசி வருகின்றன.

we-r-hiring

ஆனால், திமுக கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாக திருமாவளவன் திட்டவட்டமாக கூறி வருகிறார். 2026 சட்டசபை தேர்தலையொட்டி, தொடர்ந்து திருமாவளவனுக்கு பல கட்சிகள் கொக்கி போட்டுப் பார்க்கின்றன. அந்தவகையில், முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை, இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசினார்.

இன்பதுரை பேசுகையில், “திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.” என்றார். தொடர்ந்து பேசிய இன்பதுரை, “நான் அரசியல் பேச வரவில்லை.. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும் அவர் வருவார் எனத் தெரியும். அவரும் ஒரு வழக்கறிஞர். திருமா நம்மோடுதான் இருக்கிறார். எப்போதும் நம்மோடுதான் இருப்பார். நல்லவர்கள் பக்கம் இருப்பார்” எனப் பேசினார். விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

அதிமுக நிர்வாகி இன்பதுரை பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணி தொடர்பாக விசிக-வை முன்வைத்து விவாதங்கள் நடந்து வரும் சூழலில், இன்பதுரையின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ