spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய - கள்ள நோட்டு கும்பல்

போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய – கள்ள நோட்டு கும்பல்

-

- Advertisement -

ஆந்திராவில் கள்ள நோட்டு கும்பலை புழக்கத்தில் விட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசாரின் வாகனத்தை வழி மடக்கி நிறுத்தி சுமார் 25 பேர் கொண்ட கும்பல் போலீசாரை தாக்கி விட்டு அழைத்துச் சென்றுள்ளனா்.

போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல்

we-r-hiring

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம்  ஜி.  சிகடம் போலீசார் பெனாசம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது  சந்தேகம்படும்  வகையில் பைக்கில் வந்த  ரவி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரை பிடித்து அவர்களை சோதனையிட்டபோது ₹ 15 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கியது. அவர்களிடம் நடத்திய விசாரனையில்  கள்ள நோட்டு மோசடியில்   மேற்கு கோதாவரியில் உள்ள நர்சாபுரத்தைச் சேர்ந்த பிரபாகர் மற்றும் ராஜமுந்திரியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி ஆகியோர்  மூளையாக செயல்பட்டதாக போலீசார் கண்டு பிடித்தனர்.

போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல்

இதனையடுத்து டிசம்பர் 12 அன்று, ஜி சிகடம் போலீசார் பீமாவரத்தில் பிரபாகரை கைது செய்தனர். பின்னர் கிருஷ்ண மூர்த்தி பற்றிய கூடுதல்  தகவல்களை சேகரிக்க ராஜமுந்திரியின் ,பிரகாஷ் நகர், போலீசாரை சந்தித்து அவர்கள் உதவியுடன் கிருஷ்ண  மூர்த்தியைக் கண்டுபிடிக்க சென்றும் முடியாததால்  பிரபாகரை மட்டும்  காவலில் வைத்துக்கொண்டு ஸ்ரீகாகுளத்துக்கு  போலீசார் வாகனத்தில் அழைத்து கொண்டு வெள்ளிக்கிழமை இரவு  புறப்பட்டனர். இந்நிலையில் பீமவரத்தில் இருந்து போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த   இரண்டு கார்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 25 பேர் கொண்ட கும்பல் போலீசார் வாகனத்தை  ராஜமுந்திரியில் உள்ள ஆர்டிசி பேருந்து நிலையம் அருகே வழிமறித்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு நான்கு கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி காயப்படுத்தி விட்டு

போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல்

பிரபாகரை விடுவித்து போலீசாரின் வாகனத்தின் சாவியை பிடிங்கி கொண்டு பிரபாகரை தங்களுடன் அழைத்து சென்றனர். இதனால் போலீசார் அவசர போலீஸ் எண் 100 க்கு போன் செய்து நடந்த விவரங்களை கூறினர். இதனையடுத்து  பிரகாஷ் நகர் இன்ஸ்பெக்டர் பாஜி லால் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களையும், தப்பியோடிய பிரபாகரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் வாகனத்தை நிறுத்தி  போலீசாரை தாக்கிய கள்ளநோட்டு கும்பல் தலைவனை அழைத்து சென்ற சம்பவம் போலீசாருக்கு சவால் விடும் விதமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி டார்ச்சரால் வீடியோ வெளியிட்டு கணவர் தற்கொலை: சிக்கிய கொடூர குடும்பம்

 

MUST READ