- Advertisement -
மார்கழி மாதம் என்றால் கடவுளுக்கு பூஜை செய்து வழிபடுவர். பூக்களின் தேவையானது அதிகரித்திருப்பதாலும், பனியின் காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் தற்பொழுது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் மல்லிகைப்பூ ரூ.2,500ஆகவும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.800ஆகவும் அதிகரித்துள்ளது. கோவையில் மல்லிப்பூ ஒரு கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,000 வரை அதிகரித்துள்ளது. முல்லைப்பூ விலைரூ.1800 ஆகவும், அரளி ரூ.600 ஆகவும் உயர்ந்துள்ளது.