நான் ஏன் இந்தியாவில் பிறந்தேனோ? என பிரதமர் மோடி பேசினார்! அது சரியா?- நாராயணசாமி
2023-ல் மோடி அரசின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கப்படும். இதற்கு முன் நான் ஏன் இந்தியாவில் பெறந்தேனோ என வெளிநாட்டில் பேசியுள்ளார். இந்தியாவை பற்றி பிரதமர் இழிவாக பேசினார். ஆனால் அது சரி. ராகுல் காந்தி பேசியது தவறா? என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை ஆளும்கட்சியினர் பாராட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 900 கோடிக்கு போடப்பட்ட பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடியைத்தான் அரசு செலவு செய்துள்ளது. இதற்கு நிதி பற்றாக்குறைதான் காரணம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்யும் திட்டங்களுக்கான நிதி ரூ.267 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சிறப்புக்கூறு நிதியில் ரூ.166 கோடி நிதி செலவு செய்யவில்லை. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.11 ஆயிரத்து 600 கோடியில் ரூ.9 ஆயிரம் கோடி சம்பளம், ஒய்வூதியம், மின்சார கொள்முதல், மானியம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும். மீதமுள்ள ரூ.2 ஆயிரத்து 600 கோடியில் ரூ.ஆயிரத்து 100 கோடி கூட்டுறவு மானியமாக சென்றுவிடும். எஞ்சிய தொகையில்தான் சாலை, குடிநீர், பராமரிப்பு வசதிகளை செய்ய வேண்டும். கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் நல்ல திட்டம்தான். இதற்கு நிதி எங்கிருந்து வரும்? என குறிப்பிடவில்லை. இதற்கு நிதி எங்கிருந்து வரும்? என குறிப்பிடவில்லை.

குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம்தான் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. கடந்த ஆண்டு ரூ.260 கோடி குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு இலவச அரிசி உட்பட அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து ரூ.14 கோடி குறைத்து ரூ.246 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் புதுவை மாநில வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. தற்போது இது குறைந்து 5 சதவீதமாக உள்ளது. படித்த இளைஞர்களை மாடு மேய்க்க ரங்கசாமி சொல்கிறார். வேலைவாய்ப்பு தர வழியில்லை.
நாடாளுமன்றம் கடந்த திங்கள் கிழமை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 5 நாட்களாக முடங்கியுள்ளது. எதிர்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமரின் நண்பரான அதானிக்கு பொதுத்துறை நிறுவனங்களை எந்த நிபந்தனையும் இன்றி கொடுத்துள்ளார். அதானி பிரதமரின் பினாமி என்று அனைவரும் கூறி வருகின்றனர். 2023-ல் மோடி அரசின் அராஜகத்திற்கு முற்றுபுள்ளி வைக்கப்படும். இந்திய நாட்டில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ராகுல்காந்தி கூறினார். வெளிநாட்டில் இந்தியாவை பற்றி பேசியதால் அவரை தேச துரோகி என பாஜகவினர் கூறி ஆரப்பாட்டம் நடத்துகின்றனர். இதற்கு முன் நான் ஏன் இந்தியாவில் பிறந்தானோ என வெளிநாட்டில் பேசியுள்ளார். இந்தியாவை பற்றி பிரதமர் இழிவாக பேசினார். ஆனால் அது சரி. ராகுல் காந்தி பேசியது தவறா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.