spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பும்ராவின் இரட்டை சதம்... உலகின் நம்பர்-1 வீரர்... சாதனைமேல் சாதனை..!

பும்ராவின் இரட்டை சதம்… உலகின் நம்பர்-1 வீரர்… சாதனைமேல் சாதனை..!

-

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாக்சிங் டே டெஸ்டின் நான்காவது நாளில் சாம் கான்ஸ்டாஸை வெளியேற்றினார். இது அவரது 199வது விக்கெட். இதன் பிறகு கடந்த இரண்டு டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்த டிராவிஸ் ஹெட்டை வேட்டையாடினார். அவரது கேட்சை நிதீஷ் குமார் ரெட்டி பிடித்தார். பும்ரா 2018 ல் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸ் பும்ராவுக்கு சோதனையாக அமைந்தது. தனது திறமையை நிரூபிக்க முடியவில்லை. இந்த இன்னிங்ஸில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

we-r-hiring

டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். அவர் தனது 8484வது பந்தில் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்தார். உலகிலேயே குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ். 1989 ஆம் ஆண்டு அறிமுகமான வக்கார் 7725 பந்துகளில் 200 விக்கெட்டுகளை கடந்திருந்தார். இந்தப் பட்டியலில் உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் பும்ரா.

டெஸ்டில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் 7725- வக்கார் யூனிஸ், 7848- டேல் ஸ்டெய்ன், 8153- ககிசோ ரபாடா, 8484- ஜஸ்பிரித் பும்ரா உள்ளனர்.

குறைந்த ரன்களை கொடுத்து 200 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். உலகின் முதல் பந்து வீச்சாளர் இவர்தான். இதுவரை டெஸ்டில் எந்த ஒரு பந்து வீச்சாளரும் 4000 ரன்களைக் கொடுப்பதற்கு முன்பு 200 விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. ஆனால் பும்ரா சாதித்துள்ளார். 3912 ரன்கள் கொடுத்து 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார்.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் வலுவான மறுபிரவேசம் செய்தனர். 34வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஜஸ்பிரித் பும்ரா டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் மிட்செல் மார்ஷையும் அவுட்டாக்கினார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அவரது கேட்சை பிடித்தார்.

மார்ஷ் தொடர்ந்து பார்முக்காக போராடி வருகிறார். கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இரண்டு முறை மட்டுமே இரட்டை இலக்கை அவரால் எட்ட முடிந்தது. அவர் 5 இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்தார், அதிகபட்ச ஸ்கோர் 9 ரன்கள்.

MUST READ