spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பண்டிகை: முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!

பொங்கல் பண்டிகை: முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!

-

- Advertisement -

பொங்கல் திருநாளையொட்டி 1.14 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஒத்திவைப்பு!

we-r-hiring

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. எதிர்வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயினை முன்கூட்டியே வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்று அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000/- வரவுவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ