Homeசெய்திகள்சினிமாமோகன்லால் நடிக்கும் 'எம்புரான்' படத்தின் டீசர் ரெடி..... ரிலீஸ் எப்போது?

மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் டீசர் ரெடி….. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

மோகன்லால் நடிக்கும் எம்புரான் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.மோகன்லால் நடிக்கும் 'எம்புரான்' படத்தின் டீசர் ரெடி..... ரிலீஸ் எப்போது?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் கடைசியாக பரோஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் மோகன்லால் ராம் போன்ற பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இதற்கிடையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் லூசிபர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மோகன்லால் நடிக்கும் 'எம்புரான்' படத்தின் டீசர் ரெடி..... ரிலீஸ் எப்போது?இந்த படத்தில் மோகன் லாலுடன் இணைந்து மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். மாஸான ஆக்சன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மோகன்லால், பிரித்விராஜ் கூட்டணியில் லூசிபர் 2 – எம்புரான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இப்படம் பான் இந்திய அளவில் தயாராகி வருகிறது. கடந்த ஆண்டிலேயே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மோகன்லால் நடிக்கும் 'எம்புரான்' படத்தின் டீசர் ரெடி..... ரிலீஸ் எப்போது?மேலும் இந்த படமானது 2025 மார்ச் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும் வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த டீசர் வெளியாகும் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ