spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஉயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினரே நீதிபதிகளாக நியமனம்: போராட்டத்தை அறிவித்த ஆர்.எஸ்.பாரதி

உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினரே நீதிபதிகளாக நியமனம்: போராட்டத்தை அறிவித்த ஆர்.எஸ்.பாரதி

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் போரட்டம் நடத்தப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினரே நீதிபதிகளாக நியமனம்: போராட்டத்தை அறிவித்த ஆர்.எஸ்.பாரதிதிமுக சட்டத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் விழா சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள ஒய் எம் சி ஏ அரங்கில் நடைபெற்றது.

we-r-hiring

இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் NR இளங்கோ,  சட்டத்துறை தலைவர் விடுதலை, உள்ளிட்ட திமுக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கேக் வெட்டி முதலமைச்சர் பிறந்தநாள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி  முதலமைச்சர்  பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என சொன்னாரோ அதன் படி இன்று உறுதி மொழியுடன் கொண்டாடியுள்ளதாகவும், திமுக சட்டத்துறை எடுத்த அனைத்து விஷயங்களைலும் வெற்றி பெற்றுள்ளது.

பெரியார் தலைமையில் மொழி போரில் வெற்றி பெற்றோம், மீண்டும் ஒரு போர் வந்துள்ளது அதனை முதலமைச்சர் தலைமையில் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்..

MUST READ