spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

”நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்!” என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானத்தை முன்மொழிந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தொகுதி மறுசீரமைப்பபு மாநில உரிமை மீட்கும் வகையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் தற்போது வருகை தந்துள்ளார். திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட 56 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

we-r-hiring

மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது, ”1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளே தொடர வேண்டும்; 30 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள எம்.பி.க்களின் தொகுதிகளே நீடிக்க பிரதமர் உறுதி அளிக்க வேண்டும். மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே பாதிப்பு.

தமிழ்நாடு எதிர்கொள்ளும் இந்த முக்கியமான பிரச்னைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 30 ஆண்டுகளுக்கு தற்போது உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையே நீடிக்க வேண்டும்.தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் அபாயமான செயல்; நமக்குள் எந்த கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன். மக்கள் தொகை, விகிதாச்சார முறையில் தொகுதிகளை கணக்கிட்டால் தமிழ்நாடு பாதிக்கப்படும் என மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தமிழக அரசின் சார்பி அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை தொடங்கியது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்குத் தொடங்கி இந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ் விசிக, மக்கள் நீதி மய்யம், பாமக, தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் கலந்துகொண்டுள்ளன. அதேசமயம், பாஜக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

MUST READ