spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சொகுசு வாழ்கைக்கு ஆசை… திருட்டில் ஈடுபட்ட தம்பதிகளை மடக்கி பிடித்த போலீஸ்

சொகுசு வாழ்கைக்கு ஆசை… திருட்டில் ஈடுபட்ட தம்பதிகளை மடக்கி பிடித்த போலீஸ்

-

- Advertisement -

சிங்கம்புணரி அருகே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார். அவர்களிடம் இருந்து 80 கிராம் தங்கம், சொகுசு கார் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

சொகுசு வாழ்கைக்கு ஆசை… திருட்டில் ஈடுபட்ட தம்பதிகளை மடக்கி பிடித்த போலீஸ்

we-r-hiring

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டியில் வசித்து வரும் குணசேகரன் இவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகிய இருவரும் கடந்த மாதம் 27 ம் தேதி விவசாய வேலைக்காக வீட்டை பூட்டி மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டை திறந்து பட்டபகலில் 120 கிராம் தங்கம் ரூ 40 ஆயிரம் பணம்,இரண்டு வெள்ளி காமாட்சி விளக்கை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்த அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி.ஆஸிஷ் ராவத் உத்தரவின் பேரில் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் தயாளன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இன்று சிவகங்கை- மதுரை மாவட்ட எல்கையில் கோட்டைவேங்கைபட்டி நான்கு சாலை சந்திப்பில் போலீசார் வாகன தனிக்கை செய்தனர். அப்போது மதுரையில் இருந்து சிங்கம்புணரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் போலீசார் வாகன தனிக்கை செய்வதை பார்த்து  இருசக்கர வாகனத்தை  வேகமாக திருப்பி தப்பி உள்ளனர்.

சந்தேகமடைந்து உஷாரான போலீசார் வாகனத்தை  விரட்டி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளனர். இருவரையும் சிங்கம்புணரி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த ராமு அவரதுமனைவி நாடாச்சி என்ற லதா என்பதும் தெரியவந்தது. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இருவரும் ஓசாரிபட்டியில் வீட்டை திறந்து திருட்டில்  ஈடுபட்டதாகவும் மீண்டும்  சிங்கம்புணரி பகுதியில் கொள்ளை சம்பவம் அரங்கேற்ற வந்ததாக விசாரணையில் தெரிவித்தனர். உடனே கணவன் மனைவி இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 80 கிராம் தங்க கட்டி, சிவப்பு கலர் சொகுசு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்…அதிரடி காட்டிய தனிப்படை பிரிவு

MUST READ