Homeசெய்திகள்கட்டுரைஎன்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!

என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!

-

- Advertisement -

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்பது மத்திய அரசின் தோல்வியாகும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணி மற்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ளது. எப்போது எல்லாம் பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறதோ அப்போது அந்நாட்டு மக்களின் கவனத்தை காஷ்மீர் பக்கம் திருப்பி விடுவார்கள். ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். காஷ்மீர் இணைப்பு என்பது உணர்வுப்பூர்வமாக நடைபெறவில்லை. மகராஜா ஹரிசிங், காஷ்மீர் இந்தியா – பாகிஸ்தானுடன் இணைய வேண்டாம் என்ற முடிவில் இருந்தார். ஆனால் ரசாக்கர்கள் படை, பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் ஸ்ரீநகரில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றி விடுவார்கள் என்கிற அச்சம் ஏற்பட்டது. ராஜா ஹரிசிங், இந்தியாவின் உதவியை நாடினார். மவுண்ட் பேட்டன், இந்தியாவுடன் இணையுமாறு ஆலோசனை சொன்னார். அதன்படி அவர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதனை அடுத்து, இந்திய படைகள் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை பிடித்துவிட்டது. அந்த நேரத்தில் போர் நிறுத்தம் அறிவித்தார்.

பலவித காரணங்களால் காஷ்மீரில் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானிடம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அதை சொல்வார்கள். காஷ்மீர் இந்தியாவுடன் இணைகிறபோது அவர்களுக்கு என்று தனி அரசமைப்பு சட்டம் வைத்துக்கொண்டார்கள். அவர்களின் முதலமைச்சரை, பிரதமர் என்று அழைக்க வேண்டும். காஷ்மீரின் முதலமைச்சராக இருந்த ஷேக் அப்துல்லா, இந்தியாவுடன் இருப்பது, பாகிஸ்தானுடன் இருப்பதை விட பலன் அளிக்கும் என்று நம்பினார். சட்டப்பிரிவு 370-ஐ நாம் ஏற்றுக்கொண்டு கடைபிடித்து வந்ததோம். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரமானது, இந்திய காஷ்மீர் மக்களின் வாழ்க்கை தரத்தைவிட குறைவாகவே இருந்தது. காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் இந்தியாவுன் உணர்வுப்பூர்வமாக இணையவிடாமல் அரசியல்வாதிகள் பகையை வளர்த்து வந்தனர். காஷ்மீர் முழு அமைதி பெறுவது என்பது பலபேருக்கு பிடிக்காது.

பஹல்காமில் நடைபெற்ற தாக்குதல் ஏன் துரதிர்ஷ்டவசமானது என்றால் அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு அது ஒரு கேந்திரமான இடமாகும். அனைத்து இடங்களிலும் ராணுவம் இருக்க முடியாது. அதிகாரத்தின் பலம் என்ன என்பது உணரப்பட வேண்டும். அப்படி உணரக்கூடாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று வெளியில் உள்ளவர்கள் நினைத்தார்கள் என்றால்? மிகவும் எளிதாக இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்திவிடுவார்கள். இதற்கு நாம் என்ன செய்திருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினரால் இருக்க முடியாது தான். ஆனால் ஏரியல் சர்வே செய்திருக்கலாம் அல்லவா? பயணிகள் தொலைத் தொடர்பு வசதிகளுடன் சென்றிருக்கலாமே. தாக்குதலை பற்றி முழுமையான விவரங்கள் தெரியாமல் எதையும் சொல்ல முடியாது. ஆனால் இது அரசாங்கத்தின் தோல்வியாகும். உங்களிடம் ஹெலிகாப்டர்கள் உள்ளன. தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளன. தாக்குதல் நடைபெற்ற உடன் அந்த இடத்திற்கு ராணுவத்தினர் போய் சேர்ந்திருக்க வேண்டும்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிவிட்டீர்கள். எதிர்க்கட்சி தலைவர்களை பல நாட்கள் வீட்டுக்காவலில்தான் வைத்திருந்தீர்கள். ஆங்கிலத்தில் கல்லறையின் அமைதி என்று சொல்வார்கள். அது எப்போதும் ஒரு நாட்டில் இருக்கக்கூடாது. அது சுதந்திர மக்கள் வாழும் புண்ணிய பூமியாக இருக்க வேண்டும். அப்படி பட்ட உணர்வுப்பூர்வமான ஒற்றுமை வந்திருந்தால், இவர்கள் சொல்கிறார்களே காஷ்மீரில் எந்த பிரச்சினையும் ஆக்கிவிட்டதாக சொன்னது உண்மை என்றால் இப்படி பட்ட தாக்குதல்கள் நடப்பதற்கு முனைப்புகள் நடைபெறுகிறது என்று உள்ளுர் மக்கள் தகவல் சொல்லி இருப்பார்கள். இந்திய ராணுவம் மிகவும் பாரம்பரியம் மிக்கது. அவர்களுக்கு சரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றால், அவர்கள் நிச்சயமாக அதை நிறைவேற்றுவார்கள்.

பஹல்காம் தாக்குதலில் உளவுத்துறையின் தகவல் என்ன இருந்தது? எந்த அளவிற்கு தோல்வியுற்றோம். எதனால் தாக்குதலை தடுக்க தவறினோம் என்று தீவிரமாக விசாரணை நடைபெறுவதுடன், வெளிப்படைத் தன்மையோடு பேச வேண்டும். இந்த விவகாரத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். மத்திய அரசு மீதான அச்சம் என்ன என்றால் தங்களுடைய தோல்விகள் எதுவும் பேசப்பட்டு விடக்கூடாது என்று பல உண்மைகள் முழுமையாக வெளியே வருவது கிடையாது. இன்றைக்கு நடைபெற்றுள்ள சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது ஆகும். இதில் இருந்து நாம் பாடம் படிக்க வேண்டும்.

ராணுவத்தில் ஒரு லட்சம் காலியிடங்கள் உள்ளதாக ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளனர். அமெரிக்கா – கனடா இடையே மிகப்பெரிய நில எல்லைகள் உள்ளன. ஆனால் அங்கே எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆனால் நமக்கு எந்த நாட்டுடனும் இணக்கமான சூழ்நிலை கிடையாது. வங்கதேசம், பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்ற நாடுகள் நமக்கு எதிராக உள்ளன. இதுபோன்ற நேரங்களில் நமது ராணுவம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ