Homeசெய்திகள்சினிமாதனுஷுக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் லோடிங்.... 'குபேரா' ஃபர்ஸ்ட் ரிவ்யூ கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!

தனுஷுக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் லோடிங்…. ‘குபேரா’ ஃபர்ஸ்ட் ரிவ்யூ கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!

-

- Advertisement -

பிரபல தயாரிப்பாளர் குபேரா படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.தனுஷுக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் லோடிங்.... 'குபேரா' ஃபர்ஸ்ட் ரிவ்யூ கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!

தனுஷின் 51வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குபேரா. இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். தனுஷுக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் லோடிங்.... 'குபேரா' ஃபர்ஸ்ட் ரிவ்யூ கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!இந்த படமானது வருகின்ற ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முதல் பாடலும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராகுல், குபேரா படத்தின் விமர்சனத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “சேகர் கம்முலாவின் குபேரா படத்தை பார்க்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. நடிப்பு முதல் திரைக்கதை, நாடகம் வரை அனைத்தும் மிகவும் வலுவானதாகவும், தீவிரமாகவும் இருந்தது.

we-r-hiring

தனுஷ் பிரதருக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் லோடிங். நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் என்ன ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தை அனைவரும் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ