சென்னை வள்ளுவர்கோட்டம் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு, ஜூன் 21-ம் தேதி ரூ.80 கோடி மதிப்பில் மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.உலகப்பொது மறையான திருக்குறளுக்கு நினைவுச் சின்னம் இல்லையே என்ற ஏக்கம் அனைவரிடையே காணப்பட்ட நிலையைில், இதனை போக்கும் விதமாக கலைஞா் கருணாநிதி அவா்களால் வள்ளுவா் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டது. இது கடந்த ஆட்சியில் பொழிவிழந்து காணப்பட்டது. இதனை புதுபிக்கும் விதமாக தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.80 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் என அறிவித்திருந்தாா். அவரது அறிவிப்பு வெளியானதும் கடந்த ஆண்டு ஜனவரி பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்க் கொள்ளப்பட்டு வந்தன.
மேலும், கலையரங்கம், குறள் மணிமாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுபித்தல், குறள் மாட ஓவியம் சீரமைத்தல், வளாக சுற்றுச் சுவா் புதுப்பித்தல், தூண்கள் நுழைவு வாயில் பகுதிகளில் சிற்ப வேலைபாடுகள், மாற்றுத் திறனாளிகள் நடைபாதைகள் உள்ளிட்ட போன்றவைகள் புதிய வடிவில் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
கலையரங்க மேற்கூரையில் வள்ளுவரின் படம் பிரம்மாண்டமாக வரையப்பட்டு, அதன் பின்னணியில் திருவாரூா் ஆழித் தோ் கம்பீரமாக காட்சியளிக்கிறது. முதியோா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மின் தூக்கி, பல நிலை வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், விற்பனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீா் வடிகால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, புல்வெளி, செயற்கை நீருற்று, ஒளி ஒலி காட்சி, பிரம்மாண்ட தோரணை வாயில் உள்ளிட்டவைகளும் கட்டுமானத்திற்கு சிறப்பு சோ்க்கின்றன.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தின் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் ஜூன் 21-ம் தேதி ரூ.80 கோடி மதிப்பில் மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். புதுப்பொலிவுடன் திறக்கப்பட உள்ள வள்ளுவா் கோட்டத்தை பொதுமக்கள் காண மிகவும் ஆா்வமாக உள்ளனா்.
