தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். சக மாணவிகளுடன் பேசியதற்காக மாணவர் ஸ்ரீராமை ஆசிரியா் சிம்காஸ் திட்டியுள்ளாா். இதனால் ஸ்ரீ ராம் மன வேதனையுடன் காணப்பட்டுள்ளாா். இந்நிலையில் ஆசிரியா் சிம்காஸ் சக மாணவிகளுடன் பேசியதற்காக திட்டியதாகவும், அதனால் தாம் தற்கொலை செய்துக் கொள்வதாகவும் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளாா்.
மாணவா் தற்கொலை தொடா்பாக புகாா் அளிக்கப்பட்டது. அந்த புகாாின் அடிப்படையில் காவல் துறையினா் ஆசிரியா் சிம்காஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவா் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி கட்சியை புதைச்சிட்டாரு! 2026ல் ஸ்டாலின் அமோக வெற்றி!
