மகன் வாங்கிய கடனுக்காக தந்தையைக் கடத்தி கை விரலை வெட்டி கொடூர செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசாா் மடக்கி பிடித்தனா்.பழனிசாமி என்பவரிடம் சிதம்பரத்தை சோ்ந்த நடராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் கடன் வாங்கியுள்ளாா். ”அவா் வாங்கியதோ ரூ.6 லட்சம் ஆனால் அந்த கந்து வட்டி கும்பல் கட்ட சொன்னதே ரூ.60 இலட்சம்”. இதனால் ரூ.60 இலட்சத்தை கட்ட மறுத்து நடராஜன் மயிலாடுதுறை சென்றுள்ளாா். அங்கு அந்த கந்து வட்டி கும்பல் அவரை கடத்தியுள்ளது. சீா்காழியிலிருந்து நடராஜனை கடத்தி வந்துக் கொண்டிருந்த போது, காவல் துறையினா் கடலூா் அருகே அந்த கந்து வட்டி கும்பலின் வாகனத்தை மடக்கி பிடித்தனா்.
பின்னா் வாகனத்தை போலீசாா் சோதித்தனா். அப்போது தான் அந்த கந்து வட்டி கும்பல் நடராஜனின் கைவிரலை கொடூரமாக வெட்டி, தாக்கியது அம்பலமானது. நடராஜனை மீட்ட முதுநகா் போலீசாா், காாில் இருந்த ஐந்து போ் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனா்.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?
