spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsகாதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது…

காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது…

-

- Advertisement -

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சாா்பாக தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது…தமிழக அரசின் தகைசால் தமிழா் விருதை சுதந்திர தினத்தன்று பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சமூக நல்லிணக்கத்துக்காக உழைக்கும் தினத்தன்று பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனை பெருமைப்படுத்தும் விதமாக இந்த தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.

மேலும், மனித நேயத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் தன்னை அா்பணித்துக் கொண்டவா் எம்.காதர் மொய்தீன் என்று அரசு தெரிவித்துள்ளது. சுதந்திர தின விழாவில் காதா் மெய்தீனை பெருமைப்படுத்தும் விதமாக ரூ.10 இலட்சம் ரொக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே சங்கரய்யா, நல்லகண்ணு, கி.வீரமணி மற்றும் குமாி ஆனந்தன் போன்றோா் இந்த தகைசால் விருதை பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 ஜூன் வரை அன்புமணியே பாமக தலைவர் – கே.பாலு

we-r-hiring

MUST READ