இடுக்கி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சிக்கிய ஜீப் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.பாலக்காடு மற்றும் மலப்புறம் பகுதியில் இருந்து வந்திருந்த நான்கு பேர் ஜீப்பில் ஆற்றைக் கடக்கும் பொழுது அதிக அளவு வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிக் கொண்டது. ஜீப்பிலிருந்து அவர்களுடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர்.
இதற்கிடையே கேரளாவில் இன்று இடுக்கி வயநாடு மலப்புறம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வரை மழை தொடரும் என்றும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் கடல் அலைகள் வழக்கத்தை விட உயரத்தில் எழக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மலையோர பகுதிகளில் கன மழை இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதியில் இருக்கக் கூடிய மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பு முகாம்கள் துவங்கி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக உடன் விஜய் நடத்திய பேரம்! உண்மையை உடைக்கும் இந்திரகுமார்!
