spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஅகமதாபாத் விமான விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைக்க ஒன்றிய அரசு முடிவு...

அகமதாபாத் விமான விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைக்க ஒன்றிய அரசு முடிவு…

-

- Advertisement -

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உள்துறைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது.அகமதாபாத் விமான விபத்து குறித்து  உயர்மட்டக் குழு அமைக்க ஒன்றிய அரசு முடிவு...குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 என்கிற போயிங் 787 ட்ரீம் லைனர் ரக பயணிகள் விமானம் கடந்த ஜூன் 12-ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் 242 பயணிகள் பயணம் செய்த நிலையில் ஒருவா் மட்டுமே உயிா் பிழைத்தாா்.

இந்நிலையில், அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. உள்துறைச் செயலாளர் தலைமையில் உயர் மட்டக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை நிகழாமல் தடுக்க வழிகாட்டுதல்களையும் பரிந்துரை செய்துள்ளது இந்த குழு.

தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

we-r-hiring

MUST READ