திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன் நாமக்கல் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். ஒன்றுமில்லாத காரணத்திற்கு எல்லாம் தற்கொலை செய்துக் கொள்வார்களா என்று விமர்சனம் எழுந்துள்ளது.


நாமக்கல் நகர் தில்லைபுரம் 2 வது வீதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (40) இவர் திருச்சி யில் RTO (போக்குவரத்து துறை) வாக பணியாற்றி வந்துள்ளார் இவரது மனைவி பிரமிளா இவர் நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று அதிகாலை சுப்ரமணி அவரது மனைவி பிரமிளா ஆகியோர் நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் இருவரது உடலை கைப்பற்றிய உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மகள் பி.டெக் படித்து உள்ளார் இவர் வேறொரு சமுதாயத்தை சேர்ந்த ஒரு பையனை காதலித்து வந்துள்ளார். இதனை பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர்.
காதலை கைவிடுமாறு பொற்றோர்கள் கூறி நேற்று இரவு இரண்டு பேரும் தகாராறு செய்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்.
அப்போது மகள் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்தி உள்ளார். ஆறுதல் அடையாமல் மனமுடைந்த இருவரும் இன்று அதிகாலை தனது மனைவியுடன் சுப்பிரமணியின் இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று பழனி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
நன்கு படித்து அரசு பதவியில் இருக்கும் போக்குவரத்து துறை அதிகாரி அவரது மனைவியும் மகள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலிக்கிறார் என்ற காரணத்திற்காக ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.