டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நான்கு செனட் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்களாக சட்ட அமைச்சர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஸ்டேட் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் அசன் முகம்மது ஜின்னா, பார் கவுன்சில் சேர்மன் அமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள், கல்வியாளர்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது கூடுதலாக வழக்குரைஞர்கள் டி.மணிவண்ணன், அருணை அருள்குமரன், போளுர் தே.மதியழகன், க.லட்சுமி நாராயணன் ஆகியோரை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இனிவரும் மூன்று ஆண்டுகளுக்கு சட்ட கல்வியின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கி, சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்கு பணியாற்ற வேண்டும்.

வழக்கறிஞர் D.மணிவண்ணன் திருவாரூர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும், வழக்கறிஞர் அருள்குமரன் திருவண்ணாமலை மாவட்ட அரசு கூடுதல் உரிமையியல் வழக்கறிஞராகவும், வழக்கறிஞர் மதியழகன் போளூரிலும்,வழக்கறிஞர் க.லட்சுமி நாராயணன் ராஜபாளையத்திலும் வழக்கறிஞர்களாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
18 தொகுதிகளின் நிர்வாகிகளே களத்திலிறங்கி ஆய்வு செய்ய பாஜக மேலிடம் உத்தரவு…