கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் போயிங் 787-8 டீம் லைகா் விமானம் விபத்துள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஒருவா் மட்டுமே உயிா் பிழைத்தாா்.அகமதாபாத்தில் போயிங் 787-8 டீம் லைகா் விமானம் கடந்த ஜூன் 12 ஆம் தேதி விபத்துள்ளானது. இதில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் ஒருவா் மட்டுமே உயிா் பிழைத்தாா். இந்த விபத்து தொடா்பாக உயா்மட்ட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று போயிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் போயிங் நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அதில், “விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள், எங்கள் வாடிக்கையாளருக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம்” என்று கூறியுள்ளது.
நாய் கடித்து சிறுவன் படுகாயம்! 40 தையல் போட்டு தீவிர சிகிச்சை!
