பிரதமர் மோடியின் 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை வெளியிடப்படவில்லை. அதற்கு காரணம் இந்த ஒப்பந்தங்களால் பயனடைய போவது குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் தான் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின்போது குஜராத் தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த நாடுகளிலும் பல்வேறு ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்து போட்டிருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்தால் இந்தியாவுக்கு என்ன லாபம்? என்று பார்த்தோம் என்றால் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மோடி இந்தியாவுக்கு பிரதமரா? அல்லது குஜராத் மாநிலத்திற்கு மட்டும் பிரதமரா? என்று கேள்வி எழுகிறது.
பிரதமர் சுற்று பயணத்தின்போது நமீபியா போன்ற நாடுகளுடன் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும், இது நாட்டிற்கு மிகப்பெரிய நன்மை செய்திருக்கிறார் என்றும், ஊடகங்கள் எல்லாம் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒப்பந்தம் போட்டார் என்றால் அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அது சொல்லப்படவில்லை. நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்று தான் சொல்வார்கள். அது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த பயணத்தின்போது என்ன ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. எவற்றை எல்லாம் கொண்டுவந்து குஜராத்தில் வளர்த்துவிட போகிறார்கள் என்று சொல்ல மாட்டார்கள்.
பிரதமர் நமீபியா பயணத்தின்போது பசுமை ஆற்றல், யுபிஐ போன்ற 5 விஷயங்கள் குறித்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளன. மற்றொன்று பிரதமர் மோடி விருதுகளை பெரிய அளவில் விரும்புபவர். ஒன்றரை லட்சம் பேர். 15 பேர் இருக்கும் நாடுகளில் 150 கோடி மக்களின் பிரதமர் செல்கிறபோது விருதுகளை வழங்கத்தான் செய்வார்கள். அப்போது பிரதமர் மோடி, நமீபியாவுக்கோ, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, பிரேசில் நாடுகளுக்கு என்ன செய்துள்ளார் ? எதற்காக அவருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன என்று கேள்வி எழுகிறது. இவற்றை எல்லாம் முன் கூட்டியே சொல்லி வைத்து, பிரதமர் மோடி வருகிறபோது அவருக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். அதை வைத்து பாஜகவினர் இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரம் செய்து அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்வோம். அவர் உங்கள் நாட்டிற்கு நிதி வழங்குவார். உங்கள் நாட்டில் முதலீடு செய்வார் என்று சொல்லி வைத்து செய்கிறார்கள்.
நமீபியா உலகளவில் அதிகளவு வைரம் கிடைக்கும் நாடுகளில் ஒன்றாகும். எதற்காக இதுபோன்ற சிறிய நாடுகளுக்கு செல்கிறார்கள் என்றால்? அங்கு மிஞ்சி இருப்பதை எடுத்துக்கொள்வதற்காக தான். இது இந்தியா பொருளாதாரத்தை வளர்க்க உதவும் என்று சொல்வார்கள். ஒரு ஐ.டி. கம்பெனியை தொடங்கி அமெரிக்கா, போன்ற வெளி நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தால் இதைவிட ஆயிரம் மடங்கு வருமானம் வரும். நமீபியாவில் ரூ.1,000 கோடி முதலீடு செய்து, ரூ.1,500 கோடி சம்பாதிப்பதற்கு, அமெரிக்காவில் சாதாரண ஐ.டி கம்பெனி தொடங்கினால் 50 ஆயிரம் கோடியை சம்பாதித்து விடலாம். அதனால் இவை எல்லாம் ஏமாற்று வேலைகள் ஆகும். அப்போது இந்த ஒப்பந்தங்கள் குஜராத்திகளை வளர்த்து எடுப்பதற்கும், மோடிக்கு வேண்டிய தொழிலதிபர்களை வளர்த்து எடுப்பதற்கும், அங்குள்ள வைரங்களை குஜராத்திகளுக்கு ஒப்பந்தம் போட்டு கொண்டுவருவதற்காக தான் பிரதமர் மோடி அங்கே சென்றுள்ளார்.
பிரதமர் மோடி, தன்னுடைய உரையில் நமீபியா வைரங்களுக்கு பெயர் பெற்றது என்றும், தன்னுடைய மாநிலமான குஜராத் வைரங்களை பட்டைதீட்டுவதற்கு பெயர் பெற்றது என்றும் சொல்கிறார். அப்போது ஒரு பிரதமராக இந்தியாவுக்காக பேச சென்றாரா? அல்லது குஜராத் மாநில தொழிலதிபர்களுக்காக பேச சென்றாரா? இந்த ஒப்பந்தங்களில் கிரீன் எனர்ஜி என்கிற பெயரில் சோலார் நிறுவனம் அமைக்கப்படுவதன் மூலம் அதானிக்கு லாபம். யுபிஐ என்கிற பணப்பரிமாற்ற நடைமுறையை இந்தியாவில் கையாளுவது அம்பானி நிறுவனமாகும். அப்போது அம்பானி நிறுவனத்திற்கு ஒரு நாட்டில் யுபிஐ ஒப்பந்தம் எடுத்துக் கொடுத்துள்ளார். சூரத்தில் உள்ள வைர வியாபாரிகளுக்காக நமீபியாவில் உள்ளவர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். அதற்கு ஏஜெண்டாக பிரதமர் மோடி செயல்படுகிறார். அனைத்து நாடுகளுடனும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். ஆனால் என்ன ஒப்பந்தம்? என்கிற விவரங்களை வெளியிடவில்லை. ஒருபுறம் நிலக்கரி சுரங்கம் எடுக்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் 5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் ஒன்று பிரிக்ஸ் மாநாடு. அது சர்வதேச உறவுகள் சார்ந்ததாகும். மற்ற அனைத்தும் குஜராத்திகள் சார்ந்தும், குஜராத்தி தொழிலதிபர்களையும், தனக்கு வேண்டிய தொழிலதிபர்களை வளர்த்து விடுவதற்காகவும் தான் மேற்கொண்டுள்ளார். ஆனால் ஊடகங்கள் இந்த விவரங்களை மறைத்து விடுவார்கள். ஆனால் பிரதமர் மோடியின் உண்மையான நோக்கம் என்பது குஜராத்திகளை வளர்த்து விடுவது தான். இதற்கு மிகப்பெரிய ஏஜெண்டாக ஜெய்சங்கர் செயல்படுகிறார். இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை. இந்திய மக்கள் அனைவரையும் எப்போது மோடி இந்தியர்கள் என்று நினைக்கப் போகிறார் என்று தெரியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.