spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்121-நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

121-நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

121. நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

 

we-r-hiring

1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
          கள்ளினும் காமம் இனிது

கலைஞர் குறல் விளக்கம்உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

1202. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
          நினைப்ப வருவதொன் றில்

கலைஞர் குறல் விளக்கம்விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை. எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்.

1203. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
          சினைப்பது போன்று கெடும்

கலைஞர் குறல் விளக்கம்வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்: அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?

1204. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
          தோஒ உளரே அவர்

கலைஞர் குறல் விளக்கம் – என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

1205. தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
          எம்நெஞ்சத் தோவா வரல்

கலைஞர் குறல் விளக்கம்அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்;எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்.

1206. மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
          உற்றநாள் உள்ள உளேன்

கலைஞர் குறல் விளக்கம்நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன். வேறு எதை நினைத்து நான் உயிர் வாழ முடியும்?

1207. மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
          உள்ளினும் உள்ளம் சுடும்

கலைஞர் குறல் விளக்கம்மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?

1208. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
          காதலர் செய்யும் சிறப்பு

கலைஞர் குறல் விளக்கம்எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?

1209. விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
          அளியின்மை ஆற்ற நினைந்து

கலைஞர் குறல் விளக்கம்நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்” எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

1210. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
          படாஅதி வாழி மதி

கலைஞர் குறல் விளக்கம்நிலவே! நீ வாழ்க: இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

MUST READ