spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து! சென்னை - அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு!

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து! சென்னை – அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு!

-

- Advertisement -

திருவள்ளூரில் இன்று அதிகாலை சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீபத்தால் டீசல் நிரப்பப்பட்ட டேங்க் வெடித்து தீப்பற்றி எரிந்து வருகிறது. விபத்து காரணமாக சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

we-r-hiring

சென்னை துறைமுகத்திலிருந்து, ஜோலார்பேட்டைக்கு டீசல் நிரப்பப்பட்ட சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 5.30 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றபோது, சரக்கு ரயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகின. 54 பெட்டிகளை கொண்ட அந்த சரக்கு ரயிலில் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், அவற்றில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் அந்த பகுதியே பரபரப்பாக காட்சி அளித்தது.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் யாரும் அருகில் செல்லாத வண்ணம் காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

சரக்கு ரயில் விபத்து காரணமாக சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சரக்கு ரயில் பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டபோது அரக்கோணத்திலிருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் ரயிலின் ஓட்டுநரின் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில் பெட்டிகளில் தீ பற்றி எரிந்து வருவதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதனிடையே, விபத்திற்குள்ள 6 பெட்டிகள் உள்ளிட்ட 10 பெட்டிகளை மற்ற பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் கழற்றி, மாற்று எஞ்சின் மூலம் அவற்றை எடுத்துச்செல்ல திட்டமிட்டு உள்ளனர்.  தீ ஜூவாலை கொழுந்து விட்டு எரிவதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

MUST READ