அம்பத்தூரில் வங்கியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் அடிப்டையில் விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அம்பத்தூர் பேருந்து நிலையம் பின்புறத்தில் கர்நாடகா வங்கி செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில் வங்கியில் இருந்து கரும்புகை வெளிவருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் விரைந்து வந்த அம்பத்தூர் காவல்துறையினர் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ வங்கி முழுவதும் பரவியது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வங்கியின் கதவை திறந்து தீயை அணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
தீ வேகமாக பரவியதால் வங்கியில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் தீயை அணைக்க உள்ளே செல்ல முடியாதவாறு வங்கியில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளும் வங்கியின் அரை கண்ணாடிகளும் உடைந்து சிதறியதால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் வங்கியில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அம்பத்தூர் கர்நாடகா வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகளின் செயலா எனவும் விசாரித்து வருகின்றனர்.
40 சீட்டு! பாஜக போடும் கணக்கு! மக்கள் போடும் கணக்கு தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!