spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுகவில் இணைந்த அன்வர்ராஜா! எடப்பாடி சோலியை முடித்த அமித்ஷா!

திமுகவில் இணைந்த அன்வர்ராஜா! எடப்பாடி சோலியை முடித்த அமித்ஷா!

-

- Advertisement -

அன்வர் ராஜா போன்ற எம்ஜிஆரின் பக்தர்கள், அதிமுகவில் இருந்து விலகுவது, அக்கட்சி பலவீனப்பட்டிருப்பதையே காட்டுகிறது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்தார்.

we-r-hiring

அதிமுக மூத்த நிர்வாகி அன்வர் ராஜா, திமுகவில் இணைந்துள்ளதன் பின்னணி குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அன்வர்ராஜா திமுகவில் இணைந்திருக்கிறார் என்பது உண்மையில் ஆச்சரியப்பட வேண்டிய நிகழ்வாகும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் பல அவமானங்களை அவர் சந்தித்து கொண்டிருந்தார். அப்போது எல்லாம் அவருக்கு அந்த மனமாற்றம் ஏற்பட வில்லை. பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தன்னுடைய தொகுதிக்குள்ளேயே தன்னால் தலைக்காட்ட முடியவில்லை என்று வேதனைப்பட்ட காலத்தில் கூட அவர், கூட்டணியை காரணமாக சொல்லி கட்சி மாற வேண்டும் என்று நினைக்கவில்லை.

அதற்கு காரணம் அவர் எம்ஜிஆரின் அதிதீவிர பக்தர். அதிமுகவை தொடங்கியபோது எம்.ஜி.ஆருடன் உடன் இருந்தவர்களில் மிகச் சொற்பமானவர்கள் தான் அதிமுகவில் உள்ளனர். அதில் ஒருவராக அன்வர்ராஜா இருக்கிறார் என்பது, எடப்பாடி பழனிசாமி போன்றவர்களுக்கு ஒரு பெருமையாக சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம். ஆனால் அதைக்கூட தெரியாமல் இன்றைக்கு அன்வர்ராஜா போன்ற மூத்த தலைவர்களை இழந்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறபோது உண்மையிலேயே அதிமுக கவலைக்கிடமான நிலைக்கு வந்துள்ளது என்றுதான் பார்க்கிறேன்.

பாஜகாவுடன் கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி…

அதிமுகவுக்கு இதுவரை ஏற்படாத ஒரு நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். எந்த தேர்தலிலாவது அதிமுக தங்கள் கட்சியில் இருந்துதான் முதலமைச்சர் வேட்பாளரை நிறுத்துவோம் என்று சொல்லியுள்ளதா? கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்கிற குரல் எப்போதாவது அதிமுகவிடம் இருந்து வெளிப்பட்டு உள்ளதா? கடந்த 45 ஆண்டு காலத்தில் அதிமுகவில் அதுபோன்ற ஒரு குரல் வெளிப்படவே இல்லை. காரணம் அதிமுக அந்த நெருக்கடிக்கு ஆட்படவே இல்லை. தற்போது முதன் முறையாக அதிமுக நான் தான் மாப்பிள்ளை… நான் தான் மாப்பிள்ளை என்று ஒவ்வொரு மேடையாக சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. திருவாரூரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திரு ஸ்டாலின் அவர்களே… என்று சொல்கிறார்.

என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமையப் போகிறது. அதிமுகவில் இருந்து ஒருவரை முதலமைச்சர் ஆக்குவோம் என்று பாஜக சொல்கிறது என்கிற குற்றச்சாட்டை நடப்பு அரசியலில் திமுக வைக்கிறது. அப்போது நீங்கள் யாரை நோக்கி பதில் சொல்ல வேண்டும். திமுகவை நோக்கி பதில் சொல்வதால் என்ன பயன்? திமுக நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. நீங்கள் அழிந்துபோக விரும்பவில்லை.

அதிமுகவின் ஆணி வேரை அசைத்து பார்க்கிற வேலையை பாஜக செய்துவிட்டது. அதற்கு ஆபத்து வந்துவிட்டது. அதை சுட்டிக்காட்டினால், நீங்கள் ஸ்டாலின் அவர்களே… என்று பதில் சொல்கிறீர்கள். திரு அமித்ஷா அவர்களே. உங்களின் முன்னுப்பின் முரணான கருத்துக்களுக்கு அதிமுக ஆட்படாது என்று சொல்ல உங்களுக்கு துணிவு இருக்கிறதா? டெல்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தான் எடப்பாடி பழனிசாமியிடம் செல்போனில் பேசிவிட்டதாகவும், என்டிஏ கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அவர் சொன்னதாகவும் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்க மாட்டோம் என்று சொல்கிறார். ஆனால் நயினார், என்டிஏ கூட்டணி ஆட்சிதான் அமையும் என்கிறார்.

இங்கு எங்கிருந்து என்.டி.ஏ கூட்டணி ஆட்சி வருகிறது? அதை ஏன் தெளிவுபடுத்தாமல் இருக்கிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. அதிமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிற அதிருப்தியின் வெளிப்பாடுதான் அன்வர்ராஜா அக்கட்சியில் இருந்து  வெளியேறி திமுகவில் இணைந்துள்ளது. எம்ஜிஆரின் பக்தர் ஒருவர் திமுகவுக்கு வருகிற நிலை இருக்கிறது என்றால் அதிமுக எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று பாருங்கள்.

அன்வர்ராஜாவுக்கு மிகப்பெரிய பாரம்பரியம் அதிமுகவில் உண்டு. அதிமுகவின் முகங்களில் ஒருவராக பார்க்கப்பட வேண்டிய அவரே வருகிறார் என்றால்? ஒரு மிகப்பெரிய அதிருப்தி அதிமுகவில் நிலவுகிறது என்றுதான் கருதுகிறேன். இதற்கு முழு முதற் காரணம் ஸ்திர தன்மை இல்லாத எடப்பாடி பழனிசாமிதான். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என்பது உள்ளிட்ட 10 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் பாமக, பாஜகவை தவிர்த்து மற்ற 8 கட்சிகளும் திமுக உடன் இருக்கின்றன. பாஜக தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கட்சி என்கிற பெயரோடு இருக்கிறது. தற்போது இருப்பது பாமக தான். அதுவும் இண்டாக பிளந்து நிற்கிறது. அப்படி இருக்கும் நிலையில் கூட்டணிக்கு பெரிய கட்சி வரும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைப்பதில் படுதோல்வி அடைந்துவிட்டார். பலமான கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். 2019, 2021, 2024 என மூன்று தேர்தல்களில் அமையாத பெரிய கூட்டணி, 2026 தேர்தலில் அமையும் என்று அதிமுக தொண்டர்கள் நம்பினால் நான் அவர்களுக்காக பரிதாபப் படுகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ