spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்ற தீர்மானம்!

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை, ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்ற தீர்மானம்!

-

- Advertisement -

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஜெய்சங்கர் வசித்த வீடு அமைந்திருக்கும் கல்லூரி பாதை, ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 09. கோட்டம் 111, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கல்லூரிப் பாதையை (College lane) “மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் சாலை”என பெயர் மாற்றம் செய்வதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மன்றத்தீர்மானம் எண்.931/2025, நாள்.30.07.2025 நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சில நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகளில் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிச் சாலையை பெயர் மாற்றம் செய்யப் போவதாக தவறாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. மறைந்த மக்கள் கலைஞர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் வசித்த வீடு அமைந்துள்ள இடம் கல்லூரி சாலையை ஒட்டியுள்ள கல்லூரிப் பாதையாகும் (College lane) மேற்கண்ட மன்றத்தீர்மானத்தில் இந்த கல்லூரிப் பாதைக்கான பெயர் தான் ‘மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் சாலை” என பெயர் மாற்றம் செய்ய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ