அதிா்ச்சியை கொடுத்த ICICI பேங்க். புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது.நியூ பேங்க் கணக்கு தொடங்குபவர்களின் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ICICI பேங்க் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையைநகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இது சிறு நகரங்களுக்கு ரூ.25,000 ஆகவும், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. இந்த குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு பற்றாக்குறையில் 6% அல்லது ரூ.500, இதில் எது குறைவாக இருக்கிறதோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும்.
வாடிக்கையாளா்கள் தங்களது பேங்க் சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட தொகையை, வைத்திருக்க வேண்டும். பேங்குகள் அந்தக் கணக்கின் பராமரிப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த மினிமம் பேலன்ஸை பயன்படுத்தும். மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு பேங்க்கள் அபராதம் விதிக்கும். ஒவ்வொரு பேங்கையும், தங்களுக்கென மினிமம் பேலன்ஸ் விதிகளை வைத்துள்ளது. மெட்ரோ நகரங்களுக்கு என்றால் அதிக தொகையும், கிராமங்களுக்கு என்றால் குறைந்த தொகையும் மினிமம் பேலன்ஸ் ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

உள்நாட்டு பேங்குகளில், ICICI தான் மிக உயர்ந்த குறைந்தபட்ச இருப்புத் தேவையை நிர்ணயித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குபவராக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2020 ஆம் ஆண்டில் மினிமம் பேலன்ஸ் விதியை முற்றிலுமாக ரத்து செய்தது, அதே நேரத்தில் பெரும்பாலான பேங்குகள் செயல்பாட்டுச் செலவுகளை நிர்வகிக்க குறைந்த மினிமம் பேலன்ஸ், பொதுவாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை பராமரிக்க அறிவுறுத்துகின்றன. ICICI பேங்க் இப்போது UPI பணம் செலுத்துதலுக்கான பரிவர்த்தனைகளுக்கும் பரிவர்த்தனை கட்டணங்களை வசூலிக்கிறது. ICICI பேங்கில் கூடுதல் சேமிப்பை பராமரிக்கும் பிஏக்களுக்கு, ICICI பேங்க் ஆனது ஒரு பரிவர்த்தனைக்கு 2 பேஸிஸ் பாயிண்ட்களை வசூலிக்கும். இது அதிகபட்சமாக ரூ.6 இருக்கும். எஸ்க்ரோ அக்கவுண்ட்டை பராமரிக்காத பிஏக்களுக்கு, கட்டணம் 4 பேஸிஸ் பாயிண்ட்களாக இருக்கும், அதாவது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.