கேரள நடிகையை திருமங்கலம் மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கேரள நடிகை மினு முனீர் உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வந்துள்ளார். அப்போது சென்னையில் தனியார் விடுதியில் அந்த சிறுமியை தங்க வைத்து அந்த சிறுமியிடம் நான்கு நபர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து கேரளா சென்றுள்ளார். தற்போது அந்த சிறுமி கேரளாவில் கடந்த மார்ச் மாதம் நடிகை மினு முனீர் பற்றி புகார் மனு அளித்திருக்கிறார்.
இந்த புகாரின் அடிப்படையில் கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். சம்பவம் நடைபெற்ற இடம் சென்னை என்பதால் வழக்கினை சென்னை திருமங்கலத்திற்கு மாற்றம் செய்து உள்ளனர். திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளா சென்று நடிகை மினு முனீரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
”சூப்பர் ஸ்டார்” கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம்… சென்னைக்கு படையெடுத்த ரஜினி ரசிகர்கள்!!
