தி.மு.க.வின் பொருளாளர், மக்களவை தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி அவர்களின் மறைவிற்கு தலைவா்கள் தனது இரங்கலை எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளனா்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
“கழகப் பொருளாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், என் ஆருயிர் நண்பருமான டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி ரேணுகாதேவி அவர்களது மறைவால் வேதனையடைந்தேன்.
நண்பர் டி.ஆர்.பாலு அவர்களும், தம்பி டி.ஆா்.பி ராஜா அவர்களும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!

எனது நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்து, அவர்களது கரம் பற்றி ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு மாமாவின் துணைவியார் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் சகோதரர் டி.ஆா்.பி ராஜாவின் தாயார் ரேணுகாதேவி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்தினோம். சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது இல்லத்துக்குச் சென்று, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு இணைந்து, அம்மையாரின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். அம்மையாரை இழந்து வாடும் பாலு மாமா, ராஜா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தோம்” என துணை முதல்வா் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை”தி.மு.க.வின் பொருளாளர், மக்களவை தி.மு.க. தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயாருமான திருமதி. ரேணுகா தேவி அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியப்பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபோது. உடன் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. சொர்ணா சேதுராமன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் இருந்தனர்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பா.ம.க தலைவர் அன்புமணி“திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவி ரேணுகாதேவி அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். டி.ஆர்.பாலு அவர்களின் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு பின்னணியாக இருந்து உதவிய ரேணுகா தேவி அவர்களின் மறைவு டி.ஆர். பாலு அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ரேணுகா தேவி அவர்களை இழந்து வாடும் டி.ஆர்.பாலு, புதல்வர் டி.ஆர்.பி. இராஜா உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க தலைவர் அன்புமணி கூறியுள்ளாா்.
மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசன் ”திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நண்பர் டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமதி. ரேணுகா தேவி இயற்கை எய்திய செய்தி துயரம் தருகிறது. திரு. பாலு அவர்களுக்கும், அவர்தம் மைந்தர், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது வலைத்தளப்பக்கத்தில் கூறியுள்ளாா்.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ” திமுகவின் பொருளாளரும், திமுக மக்களவைக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு அவர்களின் மனைவியும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு. டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி இயற்கை எய்திய செய்தி துயரம் தருகிறது. குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளாா்.
ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக தேர்வு – இந்தியா கூட்டணி அறிவிப்பு