spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினியை நேரில் சந்தித்த 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகை!

ரஜினியை நேரில் சந்தித்த 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகை!

-

- Advertisement -

பிரபல நடிகை, ரஜினியை நேரில் சந்தித்துள்ளார்.ரஜினியை நேரில் சந்தித்த 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகை!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் ரஜினி. இவரது நடிப்பில் அண்மையில் ‘கூலி’ திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. அதே சமயம் இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால், அடுத்தது ரசிகர்கள் பலரும் ‘ஜெயிலர் 2’ படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை சிம்ரன், ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். ரஜினியை நேரில் சந்தித்த 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகை!இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் சிம்ரன். அந்த பதிவில், “சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை. நம் சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை கழித்ததற்கு நன்றி. கூலி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படங்களின் வெற்றி இந்த சந்திப்பை இன்னும் சிறப்பாக்கி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் சிம்ரன், கடந்த 2019 இல் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் தான் முதன்முதலாக ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ