பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் அவர்கள் நட்பு குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனரபிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் மனதை திருடிவிட்டாய் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாக்கி காமெடியில் பெரும் வெற்றி படமாக அடைந்திருக்கின்றன. குறிப்பாக, மனதை திருடிவிட்டாய் படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் பிரபலமாக உள்ளது. அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக, பிரபுதேவா இயக்கிய போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் வடிவேலுவை நகைச்சுவை நடிகராக நடிக்க வைத்திருந்தார். அந்த திரைப்படங்களின் காமெடியும் இன்றும் பிரபலமாக உள்ளன.
இந்நிலையில், தற்போது பிரபுதேவா – வடிவேலு ஆகியோர் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். அந்த திரைப்படத்தை சாம் ரோட் ரிக்ஸ் என்பவர் இயக்குகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதற்கான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் தற்போது நட்பு குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, வடிவேலு நண்பா நண்பா ஓ மை நண்பா என்று பாடல் பாடுவது போன்ற அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி
