கார்த்தியின் வா வாத்தியார் பட முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர், சர்தார் 2, மார்ஷல் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், ‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தி, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இருந்து ‘உயிர் பதிக்காம’ எனும் பாடலும் வெளியானது. இதற்கிடையில் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்த படமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.