spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரஃபேல் வாட்ச் பில் இதோ.. மீண்டும் வசமாக மாட்டிக்கொண்ட அண்ணாமலை..

ரஃபேல் வாட்ச் பில் இதோ.. மீண்டும் வசமாக மாட்டிக்கொண்ட அண்ணாமலை..

-

- Advertisement -

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் தொடர்பாக இன்று ஆதாரங்களை வெளியிட்டுள்ள நிலையில், அவர் வருமான வரித்துறை விதியை மீறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதற்கு முன்னதாக, பெரும் விமர்சனத்துக்குள்ளான தனது ரஃபேல் வாட்ச் தொடர்பான ரசீதையும் இன்று அவர் வெளியிட்டார். அப்போது பேசிய அண்ணாமலை, “காவல்துறை பணியில் இருந்தபோது பெற்ற லஞ்ச பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் பொய்யாகப் பரப்பினர்.

அண்ணாமலை

we-r-hiring

ஆனால் ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்ச்சை நான் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் வாங்கினேன். இதனை கோவையைச் சேர்ந்த எனது நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன்” என்று கூறினார். அத்துடன் சேரலாதன் ராமகிருஷ்ணன் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக ஒரு ரசீதும், அவரிடமிருந்து ரொக்கமாக 3 லட்ச ரூபாய் கொடுத்து அண்ணாமலை ரஃபேல் வாட்சை வாங்கிக்கொண்டதாக கையெழுத்து போடப்பட்ட ரசீதையும் வெளியிட்டார்.

இந்த இரண்டு ரசீதுகளிலும் இருக்கும் சீரியல் நம்பர் வேறுபட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இதுஒருபக்கம் இருக்க இன்னொரு விஷயமும் தற்போது வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அதாவது, சட்டப்பிரிவு 269STபடி, ரூ. 2 லட்சத்துக்கு அதிகமாக ஒரே நாளில் ஒரே நபரிடமிருந்து ரொக்கப் பரிமாற்றம் செய்ய தடை உள்ளது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரொக்கமாக ரூ. 2 லட்சத்துக்கு அதிகமான தொகையை எந்தவொரு தனிநபரும் பெறக்கூடாது. ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் கூட ரொக்கமாக ரூ. 2 லட்சத்திற்கும் மேல் ரொக்கப் பணப்பரிமாற்றம் செய்தால், பணத்தைப் பெறுபவருக்கு அதே அளவு அபராதம் விதிக்கப்படும்.

அண்ணாமலை - ரஃபேல் வாட்ச் பில்

அப்படி ரூ.2 லட்சம் அல்லது அதற்குமேல் ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்தால், அது குறித்து யார் வேண்டுமானாலும் வருமான வரித்துறையின் கறுப்புப் பண ஒழிப்பு பிரிவுக்கு புகார் அளிக்கலாம். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இருந்து தனது வாட்ச்சுக்கான பணம் ரூ. 3 லட்சத்தை 2021 மே மாதம் சேரலாதன் ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டதாக கையெழுத்து போட்ட ரசீதையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இது வருமானவரிச் சட்ட விதிமுறை பிரிவு 269ST-ன் படி இது விதிமீறல் ஆகும்.

அண்ணாமலை - ரஃபேல் வாட்ச்

இந்த சட்டப் பிரிவைச் சுட்டிக்காட்டி, இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டால், வருமான வரித்துறை, ரொக்கமாக ரூ. 3 லட்சம் பெற்ற சேரலாதன் ராமகிருஷ்ணனுக்கு அதே அளவான ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு நாளாக ரஃபேல் வாட்ச் பில் எங்கே எனக் கேட்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரசீதை வெளியிட்டுள்ள நிலையிலும் அண்ணாமலை மீண்டும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறார். இதில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

MUST READ