spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பள்ளிக்கல்வி இயக்குநர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பள்ளிக்கல்வி இயக்குநர்

-

- Advertisement -

பட்டாசு வெடிக்கும் போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பள்ளிக்கல்வி இயக்குநர் தீபாவளி பண்டிகையானது 20.10.2025 அன்று நாடு முழுவதும் வெகு விமா்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ளார்.

அதன்படி,

  • பட்டாசுகள் கொளுத்துமிடத்துக்கு அருகாமையில் வாளியில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக் கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்க வேண்டாம்.
  • மூடிய பெட்டிகள், பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கச் செய்ய வேண்டாம்.
  • பட்டாசுகளை கூட்டமான பகுதிகள், தெருக்கள் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது.
  • பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்போ, அருகிலோ வெடிக்காதீர்கள்.
  • பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
  • குழந்தைகள், வயதானவர்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்க மாட்டோம்…இது மாநில தன்னாட்சிக்கான அவமதிப்பு – சீமான் கடும் விமர்சனம்

we-r-hiring

MUST READ